“அவர் என்னுடைய கணவர்…” முதல் மனைவிக்கு ஷாக்… சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

By Devi Ramu on புரட்டாதி 3, 2026

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் தண்டரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு விமலா என்ற மனைவியுள்ளார். இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு மணிகண்டன் தனது முதல் மனைவி விமலாவிற்குத் தெரியாமலும், தனக்குத் திருமணமான விஷயத்தை மறைத்தும் மைனர் பெண் ஒருவரைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றித் திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்குப் பின் ஆசை வார்த்தை கூறி அச்சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததில், அந்த மைனர் பெண் கர்ப்பமடைந்துள்ளார். கணவன் மைனர் பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய விவகாரத்தை அறிந்த முதல் மனைவி விமலா, இதுகுறித்து வெறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

   

இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார், மணிகண்டனைக் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். திருவண்ணாமலை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், குற்றவாளி மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.3,000 அபராதமும் விதித்து நீதிபதி தாமோதரன் தீர்ப்பளித்தார். இதன்பின் மணிகண்டனை வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.