Categories: சினிமா

தயவுசெய்து தாய்மொழியில் திட்டுங்கள்… கவிஞர் வைரமுத்து நெகிழ்வாக விடுத்த கோரிக்கை!

Spread the love

பிரபல திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள கவிதையில் கூறியிருப்பதாவது, இன்று உலகத் தாய்மொழித் திருநாள். மொழி என்பது ஒலிக்கருவி அல்ல; உயிரி ஏன் காக்க வேண்டும் மொழியை? அது காலம் சேமிக்கப்பட்ட கலம். மரபு – வரலாறு மருத்துவம் – பண்பாடு கலை – இலக்கியம் விழுமியம் – பெருமிதம் முதலானவற்றைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் ஆவண வாகனம்.

ஒரு மொழி வாழ்வது அது பேசப்படுவதால் தான். ஒரு மொழி பேசும் கடைசி மனிதனின் குழியில் மொழியும் சேர்த்தே புதைக்கப்படுகிறது. தமிழர்கள் நிறையப் பிள்ளை பெறுங்கள் அருள்கூர்ந்து தாய்மொழியில் பேசுங்கள்; எழுதுங்கள் தயவுசெய்து தாய்மொழியில் திட்டுங்கள். தனித்தமிழில் உரையாடுகிறவனை விசித்திர விலங்காய்ப் பார்க்காதீர்கள்; அவன்தான் மொழியின் கடவுக் கடவுள்.

அதிகார மையங்களில் புழங்காமல், அரசியலின் கதகதப்பு இல்லாமல், தாய்மொழி வழிக்கல்வி தழைக்காமல், அறிவியல் கருவிகளை ஆளாமல் தழைக்காது தாய்மொழி ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் இது அச்சடித்த எச்சரிக்கை தாய்மொழி புழங்குக; தாய்மொழி வழங்குக; எவ்வினத்திலும் தாய்மொழியே விளங்குக என்று தனது பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

1 மணத்தியாலம் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

1 மணத்தியாலம் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

2 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

2 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

2 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

2 மணத்தியாலங்கள் ago