“வீட்டுக்கு வெளியே விளையாடிய 9 வயது சிறுமி”… தனியாக அழைத்துச் சென்று கல்லூரி மாணவனோடு சேர்ந்து கூலி தொழிலாளி செய்த கொடூரம்… பட்டப் பகலில் நடந்த பயங்கரம்…!

By Nanthini on தை 8, 2026

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவலாங்காடு ஊராட்சியில் அரசு பள்ளி ஒன்றை இயங்கி வரும் நிலையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயதுடைய சிறுநீர் லத்திகா தினமும் பள்ளி முடித்துவிட்டு தனது வீட்டுக்கு அருகில் நண்பர்களுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனை கவனித்தால் பகுதியில் வசித்து வந்த 51 வயதுடைய கூடி தொழிலாளியான நாகேந்திரன் மற்றும் கல்லூரி மாணவனான நெல்சன் (22) ஆகிய இருவரும் சிறுமியுடன் பேசி பழகி வந்துள்ளனர்.

சரியாக சிறுமி விளையாடும் சமயத்தில் அப்பகுதிக்கு செல்லும் இருவரும் அங்கிருந்த மற்ற குழந்தைகளுடனும் நன்றாக பேசி வந்துள்ளனர். அதேபோல நேற்று முன் தினம் மாலை சிறுமி பள்ளிக்குச் சென்று விட்டு மாலை வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நாகேந்திரன் மற்றும் நெல்சன் ஆகிய இருவரும் சிறுமி லத்திகாவிடம் பேசி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு சிறுமியிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

   

இதனால் பயந்து போன சிறுமி கத்தி கூச்சலிட்டதால் அப்பகுதியில் இருந்து அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் தெரிவித்தனர். உடனே பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கூலி தொழிலாளி நாகேந்திரன் மற்றும் கல்லூரி மாணவன் நெல்சன் ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.