திடீர் பரபரப்பு..! தனிக்கட்சி தொடங்கும் ஓபிஎஸ்…? சற்றுமுன் அவசர ஆலோசனை…!!

By Soundarya on தை 8, 2026

Spread the love

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வரும் ஜனவரி 14-ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய அரசியல் கட்சி தொடங்குவது மற்றும் வரும் தேர்தலில் தனது கூட்டணி நிலைப்பாடு என்ன என்பது குறித்த முக்கிய முடிவுகளை அவர் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது புதிய கட்சியை முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் விவாதித்து வருவதாகக் கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்படவுள்ள இந்த அதிரடி முடிவுகள், தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.