“செல்லம் மாமா கூட வாடா”… அம்மாவின் தம்பி என பாசத்துடன் பழகிய சிறுமி… நேரம் பார்த்து வேலையை காட்டிய காவலர்… அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on கார்த்திகை 1, 2025

Spread the love

நாகப்பட்டினம் மாவட்டம் ஆழியூர் பகுதியை சேர்ந்த குணா (37) என்பவர் திட்டச்சேரி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய உடன் பிறந்த சகோதரிக்கு நாகப்பட்டினத்தில் உள்ள ஒருவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் குடும்பத்துடன் நாகப்பட்டினத்தில் வசித்து வருகின்றார். குணாவுக்கு வேலையில் விடுமுறை கிடைக்கும் சமயத்தில் தனது சகோதரி வீட்டுக்கு அடிக்கடி சென்று சில நாட்கள் தங்கி விட்டு வருவார்.

இதனிடையே குணாவிடம் அவருடைய சகோதரியின் மூத்த மகளான 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தனது மாமா என்ற முறையில் நெருங்கி பழகி வந்துள்ளார். ஆனால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட குணா தன்னுடைய சகோதரியின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு பிறகு குணா கொடுத்த பாலியல் தொல்லையை தாங்க முடியாத சிறு மீது தொடர்பாக குழந்தைகள் நல குழுமத்தில் புகார் அளித்தார்.

   

இதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் 12 ஆம் வகுப்பு மாணவி, அவருடைய தாய் மற்றும் காவலர் குணாவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குணா மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சகோதரியின் மகளை காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.