காலையிலேயே குஷியில் இபிஎஸ்… மீண்டும் அதிமுகவில் இணையும் பெரிய கட்சி… யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம்…!

By Nanthini on ஐப்பசி 25, 2025

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் 2026 தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்கிறது. கூட்டணியை இறுதி செய்வதற்காக கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். திமுகவின் கூட்டணி ஏற்கனவே பலம் வாய்ந்ததாக உள்ள நிலையில் பெரும்பாலான கட்சிகள் அதே கூட்டணியில் தொடர்கின்றன. அதில் அதிக சீட் வேண்டுமென்று காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகிறது. இருந்தாலும் திமுக கூட்டணி தற்போது வரை பலமாகத்தான் உள்ளது. அதே சமயம் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக பாஜகவுடன் கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதே சமயம் 2021 தேர்தலில் தங்களுடன் இருந்த பாமக இந்த முறையும் அழைத்து வருவதற்கு எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பேசி வருகிறார்.

தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே மோதல் வெடித்த நிலையில் இருதரப்பும் இரு துருவங்களாக செயல்பட்டு வந்தது. அன்புமணி தனது சுற்றுப்பயணத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் அவர் அதிமுகவுக்கு தான் ஆதரவு அளிப்பார் என சொல்லப்பட்டது. கட்சியும் கட்சி சின்னம் மற்றும் கொடி ஆகியவை அன்புமணிக்கு தான் சொந்தம் என தேர்தல் ஆணையம் கூறியதாக தகவல் வெளியான நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அன்புமணி ராமதாசை சந்தித்து பேசி இருந்தார். தொடர்ந்து ராமதாசையும் அவர் சந்தித்து பேசிய நிலையில் இந்த கூட்டணி பேச்சு வார்த்தைகள் இறுதி அடைந்ததாக சொல்லப்பட்டது. அதே சமயம் மீண்டும் அப்பா மகன் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

   

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் பாஜக மேல் இட பொறுப்பாளர் வை ஜெயந்த் பாண்டா அன்புமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். பிறகு ராமதாசையும் அவர் சந்தித்து பேசி இருந்தார். இதனிடையே மாம்பழம் சின்னமும் அன்புமணியின் வசம் வந்துள்ள நிலையில் வெற்றி வாய்ப்புள்ள 30 தொகுதிகளை அவர் பட்டியலிட்டு லிஸ்டையும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் அன்புமணி மீண்டும் இணைய உள்ளது உறுதியாகியுள்ளது