அடுத்த பரபரப்பு… பாமகவில் அன்புமணிக்கு இருக்கும் இடம்… ஒரே போடாய் போட்ட ராமதாஸ்…!

By Nanthini on ஐப்பசி 25, 2025

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் 2026 தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்கிறது. கூட்டணியை இறுதி செய்வதற்காக கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். திமுகவின் கூட்டணி ஏற்கனவே பலம் வாய்ந்ததாக உள்ள நிலையில் பெரும்பாலான கட்சிகள் அதே கூட்டணியில் தொடர்கின்றன. அதில் அதிக சீட் வேண்டுமென்று காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகிறது. இருந்தாலும் திமுக கூட்டணி தற்போது வரை பலமாகத்தான் உள்ளது. அதே சமயம் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக பாஜகவுடன் கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதே சமயம் 2021 தேர்தலில் தங்களுடன் இருந்த பாமக இந்த முறையும் அழைத்து வருவதற்கு எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பேசி வருகிறார்.

தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே மோதல் வெடித்த நிலையில் இருதரப்பும் இரு துருவங்களாக செயல்பட்டு வந்தது. அன்புமணி தனது சுற்றுப்பயணத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் அவர் அதிமுகவுக்கு தான் ஆதரவு அளிப்பார் என சொல்லப்பட்டது. கட்சியும் கட்சி சின்னம் மற்றும் கொடி ஆகியவை அன்புமணிக்கு தான் சொந்தம் என தேர்தல் ஆணையம் கூறியதாக தகவல் வெளியான நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அன்புமணி ராமதாசை சந்தித்து பேசி இருந்தார்.

   

இப்படியான நிலையில் பாமகவில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருவதால் கட்சி யார் கையில் உள்ளது என்பதே தொண்டர்கள் மத்தியில் குழப்பமாக உள்ளது. இரு பிரிவுகளாக உள்ள பாமக இணைவதற்கான எந்த சாத்திய கூறுகளும் கண்ணுக்கு எட்டிய தூரம் தெரியவில்லை. நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனிடையே பாமகவில் அன்புமணி தரப்பு என்று ஒன்று இல்லை என்றும் அது ஒரு கும்பல் மட்டுமே என்றும் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். மேலும் சின்னம் எங்களுக்கு தான் என சொல்பவர்களின் முகம் விரைவில் தொங்கிவிடும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.