சேலம் வாழப்பாடியில் பாமக எம்எல்ஏ அருள் மற்றும் அவருடைய ஆதரவாளர் சென்ற கார்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அப்போது ஆதரவாளர்கள் தடுக்க முயன்ற போது அவர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளராக எம்எல்ஏ அருள் இருந்து வருகின்றார். அவருக்கு ஆதரவாக அடிக்கடி பேசியும் கருத்துக்களையும் கூறி வருகிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுக்க வந்தபோது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கற்களை கொண்டு வீசி உள்ளனர்.
கட்டைகள் மற்றும் தடிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டும் தாக்கினர். இந்த 6 கார்கள் உடைக்கப்பட்டன. பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில், சேலம் வாழப்பாடியில் எங்களை வழிமறித்து வாகனங்களை தாக்கினார்கள். என் மீது நடந்த தாக்குதலுக்கு அன்புமணி தான். அவர் என்னை சீண்டி பார்க்க வேண்டாம். அவர் அடியாட்களை அனுப்பி தாக்க முயன்றது வருத்தம் அளிக்கிறது.
அவரைப் பற்றி பல உண்மைகள் எனக்குத் தெரியும் என்று அருள் கூறியுள்ளார். மேலும் என்னுடைய ஆதரவாளர் கார் மீது தாக்குதல் நடந்தது மட்டுமல்லாமல் என்னை இருவர் கத்தியால் கொள்ள முயற்சித்தனர். பல ஆயுதங்களைக் கொண்டு தாக்கினார்கள். போலீஸ் எனக்கு பாதுகாப்பு தருவார்கள் என்று நான் நம்புகிறேன். நான் தவறு ஏதாவது செய்திருந்தால் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…