பிகானீர்-ஜம்மு தாவி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்ஷீட் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் ரயில் பணியாளரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நவம்பர் 2 ஆம் தேதி இரவு ஒரு ஏசி பெட்டிக்குள் இந்த சம்பவம் நடந்ததால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஜுபைர் மேமன் என்ற நபரை பிகானீர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பணியமர்த்தப்பட்ட ராணுவ வீரர் ஜிக்னேஷ் சவுத்ரி குஜராத்தின் சபர்மதிக்கு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அவர் ஃபிரோஸ்பூர் கண்டோன்மென்ட்டில் இருந்து ரயிலில் ஏறினார்.முதற்கட்ட விசாரணையின்படி, சவுத்ரி உதவியாளரிடம் படுக்கை விரிப்பு கேட்டபோது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடங்கியது. இந்தப் பேச்சுவார்த்தை சூடான வாக்குவாதமாக மாறியதில் ராணுவ வீரரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…