பெட்ஷீட்டுக்கு தகராறு… இந்திய ராணுவ வீரரை குத்தி கொலை செய்த ரயில் பணியாளர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

By Soundarya on கார்த்திகை 4, 2025

Spread the love

பிகானீர்-ஜம்மு தாவி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்ஷீட் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் ரயில் பணியாளரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  நவம்பர் 2 ஆம் தேதி இரவு ஒரு ஏசி பெட்டிக்குள் இந்த சம்பவம் நடந்ததால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஜுபைர் மேமன் என்ற நபரை பிகானீர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பணியமர்த்தப்பட்ட ராணுவ வீரர் ஜிக்னேஷ் சவுத்ரி  குஜராத்தின் சபர்மதிக்கு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அவர் ஃபிரோஸ்பூர் கண்டோன்மென்ட்டில் இருந்து ரயிலில் ஏறினார்.முதற்கட்ட விசாரணையின்படி, சவுத்ரி உதவியாளரிடம் படுக்கை விரிப்பு கேட்டபோது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடங்கியது. இந்தப் பேச்சுவார்த்தை சூடான வாக்குவாதமாக மாறியதில் ராணுவ வீரரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.