CM விஜய் கொடுத்த நியூ ஐடியா… அடுத்த நொடியே அன்புமணி கையில் எடுத்த ராட்சச அஸ்திரம்…. வெளியான ‘டாப் சீக்ரெட்’ தகவல்…!

Spread the love

பாமகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், போட்டியிட்ட 18 தொகுதிகளில் வெறும் 4 இடங்களில் மட்டுமே பாமக வெற்றி பெற்ற நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளின் தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, தோல்விக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஏற்படுத்திய தாக்கமே மிக முக்கியக் காரணம் என பெரும்பாலான நிர்வாகிகள் ஒருமித்த குரலில் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

மேலும், தேர்தலுக்கு முன்பாக தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாமகவுக்கு அழைப்பு வந்த விவரத்தை நிர்வாகிகள் சுட்டிக்காட்டினர். அந்த அருமையான வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோம் என்ற வருத்தமும் கூட்டத்தில் எதிரொலித்தது. இதனை ஏற்றுக்கொண்ட அன்புமணி ராமதாஸ், பாஜக மற்றும் அதிமுகவின் அரசியல் விருப்பங்கள் குறித்தும், அந்தச் சமயத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுப்பிய சில முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக விளக்கினார். தவெக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை எந்த இடத்தில், எப்படி கைநழுவிப் போனது என்பது பற்றிய உண்மைகளையும் அவர் நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பாமகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. “நாம் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறோம், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நாம் எந்த முடிவும் எடுத்ததில்லை; ஆனால், அதற்கான தகுந்த மரியாதையை பாஜக தலைமை நமக்குத் தரவில்லை” என்று நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர். பாமகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தந்திருக்க வேண்டும் என்றும், பலமுறை கோரிக்கை விடுத்தும் அது நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய நிர்வாகிகள், தற்போது வரவிருக்கும் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது பாமகவுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதை டெல்லியில் அழுத்தமாக வலியுறுத்த வேண்டும் என அன்புமணியைக் கேட்டுக்கொண்டனர்.

“நீங்கள் (அன்புமணி) மத்திய அமைச்சரானால் மட்டுமே பாமகவை மீண்டும் எழுச்சியோடு வழிநடத்த முடியும்; இல்லையெனில் தொண்டர்கள் சோர்ந்து போவார்கள்” என்று நிர்வாகிகள் எச்சரித்தனர். மேலும், திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே நேரத்தில் கடுமையாக எதிர்க்க வேண்டுமானால் நமக்கு ஆட்சி அதிகாரம் அவசியம் என்றும், ஒருவேளை தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகாலம் நீடிக்கும் சூழல் உருவானால், வட தமிழகத்தில் விஜய்யின் கட்சியினர் பாமகவின் வாக்கு வங்கியில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி செய்வார்கள் என்றும் கவலை தெரிவித்தனர். நிர்வாகிகளின் இந்த ஒருமித்த கோரிக்கையை ஏற்று, பாமகவுக்கு மத்திய அமைச்சர் பதவியைப் பெற பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Nanthini

Recent Posts

“அப்போ அப்படி.. இப்போ இப்படி.. அப்படியே தலைகீழா மாறிட்டாரே”.. இணையத்தை உலுக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் அந்த ‘சிரிப்பு’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…

9 seconds ago

வீட்டு வாசலில் காத்திருந்த மரணம்.. 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வழக்கறிஞர்.. ஸ்கார்பியோ கார் ஏற்றி படுகொலை.. பின்னணியில் உள்ள ‘அந்த’ விவகாரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…

12 minutes ago

சுற்றுச்சூழல் துறையா..? சுற்றுலாத்துறையா..? தனக்கே என்ன துறைன்னு தெரியலையா..? செய்தியாளர் சந்திப்பில் சொதப்பிய TVK அமைச்சர்..!

தமிழக வெற்றிக் கழகம் (தவிக) அண்மையில் புதிய அமைச்சரவையைப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில்…

34 minutes ago

“2 மணி நேர இருள்.. அலறிய ICU நோயாளிகள்..! அதிரடி உத்தரவிட்ட மின்வாரியம்…!”

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.…

37 minutes ago

அட கடவுளே..! நாட்டை உலுக்கும் கோடை வெயில்.. ஒரே நாளில் 40 பேரை பலிவாங்கிய ஹீட்ஸ்ட்ரோக்.. வானிலை மையம் அவசர எச்சரிக்கை…!

இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் கடும் வெயில் காரணமாக ஏற்பட்ட…

46 minutes ago

முதுகில் சவாரி செய்துவிட்டு, முதுகிலே குத்திவிட்டார்கள்..! காங்கிரஸை இனி சேர்க்கவே கூடாது.. அண்ணா அறிவாலயத்தில் கொதித்த உதயநிதி ஸ்டாலின்..!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும்,…

46 minutes ago