கோட்டைக்கு வந்த அழகிரி மகள் கயல்விழி.. நள்ளிரவில் விஜய்யிடம் இருந்து வந்த அந்த ஒரு போன் கால்…. அறிவாலயத்தை உலுக்கிய ரகசிய வியூகம்…!

Spread the love

தமிழக அரசியலில் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில், தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்து, அவருடைய தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவிருக்கிறார் முன்னாள் முதல்வர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி. தந்தை அழகிரியின் முழு சம்மதத்துடனேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, திமுகவில் மீண்டும் இணைய அழகிரி எடுத்த முயற்சிகள் யாவும் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரின் எதிர்ப்பால் தோல்வியடைந்தன. பாஜக போன்ற மாற்றுத் திறப்புச் சக்திகள் தங்களை நோக்கி அழைத்தபோதும் அமைதி காத்த அழகிரி குடும்பம், தற்போது தவெக மூலம் திமுக தலைமைக்கு அரசியல் ரீதியான ‘செக்’ வைக்கத் திட்டமிட்டு வருவது அறிவாலய வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

முன்னதாக, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய சூழலில், அழகிரியின் மகள் கயல்விழியை திமுகவில் இணைத்து அழகிரிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என கனிமொழி எம்பியே ஸ்டாலினிடம் சிபாரிசு செய்துள்ளார். ஆனால், ஸ்டாலின் தரப்பு இதில் அக்கறை காட்டாததால் அதிருப்தியடைந்த அழகிரி, “இனி எனக்காக யாரிடமும் சிபாரிசுக்கு போகாதே, அது உனது சுயமரியாதைக்கு அழகல்ல” என்று கனிமொழிக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே, கயல்விழி வெளிப்படையாக விஜய்க்கு ஆதரவான மனநிலையை வெளிப்படுத்தத் தொடங்கினார். விஜய் முதல்வராகப் பதவியேற்ற விழாவில் பங்கேற்ற கயல்விழி, “மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர்” என்று கூறி விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குப் பச்சைக் கொடி காட்டினார்.

சமீபத்தில் கோட்டைக்கு வந்த கயல்விழி, முதல்வர் விஜய்யை சந்திக்க இயலாமல் அமைச்சர்களை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பியுள்ளார். இந்தத் தகவல் அறிந்த முதல்வர் விஜய், அன்றிரவே அழகிரியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “அண்ணே, நான் இல்லாத போது கயல் வந்துள்ளார். நான் சொல்கிறேன், அப்போது கயல் வரட்டும்” என்று பாசத்தோடு பேசியதாக தவெக தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அரங்கேறி, கயல்விழி முறைப்படி தவெகவில் இணையவிருக்கிறார் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

கயல்விழி தவெகவில் இணையும் பட்சத்தில், அவரை திருச்சி கிழக்குத் தொகுதியில் களம் இறக்க விஜய்யின் அரசியல் ஆலோசகர்கள் திட்டமிட்டு வருகின்றனர். ஏனெனில், அங்கு உதயநிதியின் நெருங்கிய நண்பரான அன்பில் மகேஸை களம் இறக்க திமுக திட்டமிட்டுள்ளதாம். உதயநிதியின் நண்பரைத் தோற்கடிக்க, திமுக குடும்பத்திலிருந்தே ஒருவரை நிறுத்துவதுதான் சரியான வியூகம் என தவெக நினைக்கிறது. இதற்குப் போட்டியாக கனிமொழியை களம் இறக்க திமுக தலைமை யோசித்தாலும், அண்ணன் அழகிரியின் மகளுக்கு எதிராகப் போட்டியிட கனிமொழி சம்மதிக்க மாட்டார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி இப்போதே தமிழக அரசியலின் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

“நல்லா அழுங்க.. உங்க சாயம் வெளுத்துடுச்சு!”.. திமுகவை வெளுத்து வாங்கிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக)…

7 minutes ago

திமுக – அதிமுகவுக்கு ஒரே நேரத்தில் செக் வைத்த ED!.. 22 மாஜி அமைச்சர்கள்.. சொத்து டூ ஊழல்.. மொத்தமாக லாக் ஆன கழகங்கள்.. கசிந்தது ரகசிய லிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி…

16 minutes ago

“அப்போ அப்படி.. இப்போ இப்படி.. அப்படியே தலைகீழா மாறிட்டாரே”.. இணையத்தை உலுக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் அந்த ‘சிரிப்பு’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…

25 minutes ago

வீட்டு வாசலில் காத்திருந்த மரணம்.. 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வழக்கறிஞர்.. ஸ்கார்பியோ கார் ஏற்றி படுகொலை.. பின்னணியில் உள்ள ‘அந்த’ விவகாரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…

36 minutes ago

சுற்றுச்சூழல் துறையா..? சுற்றுலாத்துறையா..? தனக்கே என்ன துறைன்னு தெரியலையா..? செய்தியாளர் சந்திப்பில் சொதப்பிய TVK அமைச்சர்..!

தமிழக வெற்றிக் கழகம் (தவிக) அண்மையில் புதிய அமைச்சரவையைப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில்…

59 minutes ago

“2 மணி நேர இருள்.. அலறிய ICU நோயாளிகள்..! அதிரடி உத்தரவிட்ட மின்வாரியம்…!”

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.…

1 மணத்தியாலம் ago