PM உஜ்வாலா 3.0: ஏழைப் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..? முழு விவரம் இதோ..!!

By Soundarya on ஆனி 18, 2026

Spread the love

மத்திய அரசின் ‘பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0’ திட்டத்தின்கீழ், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய எல்பிஜி (LPG) கேஸ் இணைப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களின் சமையல் தேவையை எளிதாக்கவும், பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் நாடு முழுவதும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் பெண் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது முதன்மை நிபந்தனையாகும். மேலும், மிக முக்கியமான விதியாக, விண்ணப்பிக்கும் பெண்ணின் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ ஏற்கனவே வேறு எந்தவொரு எல்பிஜி கேஸ் இணைப்பும் இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்திற்கு ஒரு இலவச இணைப்பு மட்டுமே இந்த விதியின் கீழ் அனுமதிக்கப்படும்.

   

இலவச கேஸ் இணைப்பு பெறுவதற்கு வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள குடும்பங்களுடன், குறிப்பிட்ட சில பிரிவினருக்கு முன்னுரிமை தகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினர், பிரதமரின் ஆவாஸ் யோஜனா வீட்டு வசதி திட்டப் பயனாளிகள், அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் அட்டைதாரர்கள், காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் மிகவும் பின்தங்கிய நலிவடைந்த புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர்.