550-வது ஆண்டு விழா கொண்டாட்டம்…!! 77 அடி உயர ஸ்ரீராமர் சிலையைத் திறந்து வைக்கும் பிரதமர் மோடி…!! எங்குள்ளது தெரியுமா….?

By Devi Ramu on கார்த்திகை 28, 2025

Spread the love

தெற்கு கோவாவில் உள்ள கனகோனாவில் இருக்கும் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில், 77 அடி உயர ஸ்ரீராமரின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலை இன்று (நவம்பர் 28, 2025) பிரதிஷ்டை செய்யப்படுகிறது, இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் ஏற்கெனவே நடந்துள்ளன.

இன்று பிற்பகலில் பிரதமர் நரேந்திர மோடி இந்த 77 அடி உயர ஸ்ரீராமர் சிலையைத் திறந்து வைக்கிறார். இதன் பிறகு பக்தர்களுக்கும் விருந்தினர்களுக்கும் சிலை தரிசனம் மற்றும் சபா நிகழ்ச்சிகள் நடைபெறும். மடத்தின் 550வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தச் சிலை திறக்கப்படுவதாகவும், இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். இந்தச் சிலையை, குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.