பிஎம் கிசான் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. இனி ரூ.2000 அல்ல ரூ.4000…? உயரும் உதவித்தொகை….!!

By Soundarya on மார்கழி 22, 2025

Spread the love
மத்திய அரசு விவசாயிகளுக்காகச் செயல்படுத்தி வரும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படுகிறது. இது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ₹2,000 வீதம் மூன்று தவணைகளாகப் பிரித்து கொடுக்கப்படுகிறது.
இந்தத் தவணைத் தொகையை ₹2,000-லிருந்து ₹4,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகை உயர்வு அமலுக்கு வந்தால், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ₹12,000 கிடைக்கும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.