BREAKING: சற்று நேரத்தில் வங்கிக் கணக்கில் ரூ.2,000… காலையிலேயே குட் நியூஸ்….!

By Nanthini on கார்த்திகை 19, 2025

Spread the love

நாடு முழுவதும் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 20 தவணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை, கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெறும் வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் 21 வது தவணையாக 18000 கோடி உதவி தொகையை 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வழங்க உள்ளார். இந்த திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 21,80,204 விவசாயிகள் பயன்பெறுகின்றனர். மேலும் இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கும் பிரதமர் மோடி விருது வழங்கிய கௌரவிக்க உள்ளார்.