பிரதமர் வேட்பாளர் சர்ச்சை…. சட்டென டோனை மாற்றிய காங்கிரஸ்…. செம குஷியில் தவெக…. CM விஜய் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

Spread the love

தமிழகத்தில் தவெக தலைமையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே கூட்டணிக்குள் சலசலப்புகள் உருவாகத் தொடங்கின. முக்கியமாக, அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவகாரத்திலும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் மீதும் காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களால் கூட்டணிக்குள் பெரிய விரிசல் விழுந்துவிட்டதோ என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இதனால், ஆளும் கூட்டணிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் தான் தற்போதைய அரசியல் விவாதங்களின் முதன்மைப் பொருளாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், இந்த விமர்சனங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடியாக தனது பேச்சை மாற்றியுள்ளார். “எதிர்வரும் 2029 மக்களவைத் தேர்தல் என்பது வெறும் தமிழகத்தின் 40 தொகுதிகளுக்கானது மட்டுமல்ல, நாடு முழுவதிலும் உள்ள 543 தொகுதிகளுக்கானது” என்று குறிப்பிட்ட அவர், நிருபர்கள் மீண்டும் மீண்டும் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்பதை விட்டுவிட்டு, நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்தும் சக்திகள் குறித்துச் சிந்திக்க வேண்டும் எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளை உடைக்கவும், மக்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்கவும் மோடியும் அமித்ஷாவும் பல சதிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய மாணிக்கம் தாகூர், இவற்றைச் செய்யும் நபர்களை “எட்டப்பர்கள்” என்று கடுமையாக விமர்சித்தார். “இத்தகைய எட்டப்பர்களின் சதியால் 543 தொகுதிகளில் நடக்கும் தேர்தல், நாளை 843 தொகுதிகளாக மாறுமா என்ற கேள்விதான் இப்போது முக்கியமானது; அதை விடுத்து ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் அரசியலை மட்டுமே மீண்டும் மீண்டும் பேசுவது அர்த்தமற்றது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில், தமிழக முதலமைச்சர் விஜய்யின் நிர்வாக நடவடிக்கைகளைப் பாராட்டிய மாணிக்கம் தாகூர், சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பும் தைரியமான முடிவை தவெக அரசு எடுத்திருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்தார். சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுவதாகவும், மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் பரிந்துரைகள் கூட ஏற்கப்பட்டு ஜனநாயக முறைப்படி அவை நடத்தப்படுவதாகவும் புகழாரம் சூட்டினார். “இந்தக் கூட்டணியைப் பிரிப்பதற்காக வெளியே பல நரித்தந்திரங்கள் நடக்கின்றன, ஆனால் அவை நேற்றோடு முடிந்துவிட்டன” எனக் கூறி கூட்டணி பிளவு குறித்த அனைத்து வதந்திகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Nanthini

Recent Posts

“வாங்க பழகலாம்…” கவர்ச்சியாக பேசி மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பெண்…. கண்விழித்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…

36 minutes ago

“நாயுடன் தகாத உறவு…?” திருடனை பிடிக்க வைத்த கேமரா…. மனைவி வீடியோவை பார்த்து அதிர்ந்து போன கணவர்…. பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்…

46 minutes ago

“மயக்க ஊசியும் 9 இன்சுலின் பாட்டில்களும்…” படுக்கையில் சடலமாக கிடந்த பெண் மருத்துவர்… டைரியில் சிக்கிய உருக்கமான கடிதம்…!!

புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி வாசுதேவனின் 26 வயது மகள் டாக்டர் யோகலட்சுமி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்…

56 minutes ago

“சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி தா…” வாலிபரை துடிதுடிக்க குத்தி கொன்ற கும்பல்…! டாஸ்மாக் கடை அருகே பயங்கர சம்பவம்…!!

தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரான புவனி, தனது நண்பர் ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள…

1 மணத்தியாலம் ago