“என் அக்கா கூட எதுக்குடா பேசுற”.. பிளஸ் 2 மாணவனை அரிவாளால் வெட்டிய 10th மாணவன்.. நெல்லையில் அடுத்த பயங்கரம்…!

By Nanthini on ஆவணி 6, 2025

Spread the love

நெல்லையில் சமீபத்தில் கவின் என்பவர் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்னும் முடிவடையாத நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றான். இவனுக்கு அதே ஊரை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவருடன் ஒரே வகுப்பில் படித்து வருவதால் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் வகுப்பு முடிந்து வீட்டுக்கு சென்ற பிறகும் அந்த மாணவர் செல்போனில் மாணவியுடன் மணி கணக்கில் பேசி வந்துள்ளார்.

இந்த விவகாரம் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியின் 15 வயதான தம்பிக்கு தெரிய வர ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தனது அக்காவுடன் பேசுவதை நிறுத்துமாறு அந்த +2 மாணவனிடம் அடிக்கடி மிரட்டல் விடுத்துள்ளார்.. ஆனால் அந்த மாணவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து மாணவியுடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தம்பி அப்பாவுடன் பழகும் பிளஸ் 2 மாணவரை தாக்குவதற்கு திட்டமிட்ட நிலையில் தனது வகுப்பில் படிக்கும் நண்பரான 15 வயது சிறுவனிடம் கூறி இருவரும் சேர்ந்து அதே பகுதியில் வசிக்கும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 17 வயது சிறுவர்கள் மூன்று பேரிடம் சென்று பேசி திட்டமிட்டுள்ளனர்.

   

இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவில் மாணவியின் தம்பி உட்பட ஐந்து சிறுவர்கள் சேர்ந்து பிளஸ் டூ மாணவனின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து உங்களுடன் பேச வேண்டும் என்னோடு வாருங்கள் என்று அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தெருவின் ஓரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த மாணவரை அழைத்துச் சென்று பிறகு சற்றும் தாமதிக்காமல் மனைவியின் தம்பி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிளஸ் டூ மாணவனை வெட்டினர். இதில் அவருடைய கையில் வெட்டுக்காயம் பட்ட நிலையில் உடனே அலறியுள்ளார்.

   

இதனால் ஐந்து சிறுவர்களும் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த மாணவனின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை வெட்டிய மாணவியின் தம்பி உட்பட ஐந்து சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.