தேனி கருவேல் நாயக்கன்பட்டியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரியா தம்பதியினருக்கு யோகஸ்ரீ (17) மற்றும் பானு ஸ்ரீ என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சுரேஷ் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்ட நிலையில் பிரியா தன்னுடைய இரண்டு மகள்களுடன் தேனி ஃபாரஸ்ட் ரோடு மூன்றாவது தெருவில் வசித்து வந்துள்ளார். பிரியா கூலி வேலை செய்து வரும் நிலையில் மூத்த மகள் யோகா ஸ்ரீ தேனியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை பிரியா, தன்னுடைய மகள் யோக ஸ்ரீரிடம் செல்போன் மற்றும் 500 ரூபாயை கொடுத்து வைத்திருக்குமாறு கூறிவிட்டு அதே பகுதியில் உள்ள தனது உறவினர் இறப்புக்கான இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டார். பின்னர் வீடு திரும்பியதும் தனது மகளிடம் பணத்தையும் செல்போனையும் கேட்ட நிலையில் யோகஸ்ரீ சரியாக பதிலளிக்காமல் இருந்துள்ளார். இதனால் அவர் தன்னுடைய மகளை கண்டித்து விட்டு வெளியே சென்று விட்டார்.
அப்போது யோகஸ்ரீ தன்னுடைய வீட்டில் தனியாக இருந்த நிலையில் சிறிது நேரம் கழித்து வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். வெளியே சென்று திரும்பிய பிரியா தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியோடு மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் யோகஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…