நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய மகன் அஜய் (26) எஞ்சினியராக பணியாற்றி வருகின்றார். இவருடைய உறவினரான நாமக்கல் ஏ எஸ் பேட்டையை சேர்ந்த தண்டபாணியின் மகளும், இன்ஜினியரிங் கல்லூரி மாணவிகளுமான நந்தினியும் (21) கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் நந்தினியின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். இதனிடையே நேற்று வழக்கம்போல திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரிக்கு நந்தினி சென்ற நிலையில் மாலையில் அவர் பஸ்ஸில் நாமக்கல்லுக்கு வந்து இறங்கியுள்ளார் .
பிறகு ஏற்கனவே திட்டமிட்டபடி நாமக்கல்லில் உள்ள சேலை சாலை சந்திப்பில் அஜய் மற்றும் அவருடைய உறவினர்கள் யுவராஜ், ஜெயலக்ஷ்மி ஆகியோர் உட்பட நான்கு பேர் காத்திருந்து காரில் நந்தினியை ஏற்றி சென்றனர். இதனிடையே மாணவியை அழைத்துச் செல்ல அங்கு வந்து அவருடைய தந்தை தண்டபாணி மகள் காதலனுடன் காரில் ஏறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளார். தொடர்ந்து அவர் அஜய் மற்றும் உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு உறவினர்கள் சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்து தகராறு செய்து உள்ளார். அப்போது திடீரென்று காருக்குள் சென்ற அஜய் தான் கையில் வைத்திருந்த தாலியை நந்தினியின் கழுத்தில் கட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
காருக்குள் தன்னுடைய கண்முன்னே மகளுக்கு காதலன் தாலி கட்டியதை கண்டு ஆத்திரம் அடைந்த தண்டபாணி மற்றும் உறவினர்கள் காரின் கண்ணாடியை உடைத்தனர். மேலும் காரில் இருந்து அஜய் உள்ளிட்டோரை தாக்கிய நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை கண்ட போக்குவரத்து போலீசார் பொதுமக்கள் உதவியோடு அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அஜயை விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டதாக நந்தினி தெரிவித்த நிலையில் இருதரப்பையும் சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். விமலின் களவாணி பட பாணியில் நடந்த இந்த சம்பவம் நாமக்கல்லை அதிரவிட்டது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…