அதிபர் டிரம்பின் மகள் இவான்காவை கொல்ல சதி..! அமெரிக்காவை உலுக்கிய ஈரான் பயங்கரவாதியின் பகீர் சதித் திட்டம்…!

By Swetha on வைகாசி 24, 2026

Spread the love

கடந்த 2020-ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப் பழிவாங்கும் நோக்கில், டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்ப்பைக் கொலை செய்ய ஈரான் புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய முகமது பாகிர் சாத் தாவூத் அல்-சாதி (32) என்ற ஈராக் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதி சதித் திட்டம் தீட்டியுள்ளார். காசிம் சுலைமானியைத் தனது குருவாகக் கருதிய அல்-சாதி, டிரம்ப் குடும்பத்தாரைப் பழிவாங்க நீண்ட நாட்களாகக் காத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அல்-சாதியிடமிருந்து, புளோரிடாவில் உள்ள இவான்கா டிரம்ப்பின் சொகுசு வீட்டின் முழுமையான வரைபடம் (Blueprint) மற்றும் பாதுகாப்பு விபரங்களை உளவு அமைப்புகள் பறிமுதல் செய்துள்ளன. மேலும், “உங்களது அரண்மனைகளோ அல்லது பாதுகாப்புப் படையினரோ உங்களைக் காப்பாற்ற முடியாது” என்று இவான்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டிருந்த மிரட்டல்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இவான்காவின் வீட்டை அவர் ரகசியமாகக் கண்காணித்து, தாக்குதலுக்குத் தயாராகி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

   

இந்த அதிர்ச்சி தரும் கொலைச் சதித் திட்டத்தை அமெரிக்க மற்றும் சர்வதேச உளவு அமைப்புகள் முன்கூட்டியே கண்டறிந்து முறியடித்தன. இதனைத் தொடர்ந்து, துருக்கியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி முகமது அல்-சாதி அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, தற்போது மேல் விசாரணைக்காக அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிகளிலும் இவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்போதைய பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.