cot

இரும்பு கட்டில் உடைந்ததால் தூக்கத்திலேயே உயிரிழந்த தந்தை- மகன்… பழைய கட்டில் வைத்திருந்தால் உடனே இதை செய்யுங்க…

By admin on கார்த்திகை 5, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மரணம் எப்போது எப்படி நிகழ்கிறது என்பதே தெரியவில்லை. துர் மரணங்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல் ஆபத்தும் நிறைந்திருக்கிறது. பெண் குழந்தைகளை தைரியமாக வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியவில்லை. அதேபோல் ரோட்டிலும் சென்று பாதுகாப்பாக வீட்டுக்கு திரும்புவது என்பது கடினமான காரியம் தான்.

   

இது தவிர உணவில் கலப்படம் ஃபாஸ்ட் புட்டுகள் காற்று மாசு என பலவித நோய்கள் காரணமாக கூட மரணங்கள் ஏற்படுகிறது. ஆனால் இப்படி கூட ஒரு மரணம் நிகழுமா இதையெல்லாம் என்னவென்று சொல்வது என்பது போல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

   

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாரணர் பட்டியில் தந்தை மகன் இரவு நேரத்தில் இரும்பு கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தனர். எதிர்பாரா விதமாக அது பழைய கட்டில் என்பதால் கட்டில் காலில் இருந்த நட்டு ழன்று அந்த கால் உள்பக்கமாக வளைந்ததில் படுத்திருந்த தந்தை மற்றும் மகனின் கழுத்தை நெருக்கி தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர்.

 

இந்த சம்பவம் அந்த பகுதியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது போன்ற வினோத மரணம் இதுவரை எங்கேயும் நிகழ்ந்ததே இல்லை. சம்பவ டத்திற்கு வந்து விசாரித்த காவல்துறையினர் யார் வீட்டிலும் பழைய கட்டில் இரும்பு கட்டில் போன்றவை வைத்திருந்தால் அதை முறையாக பராமரித்து நட்டு எல்லாம் கரெக்டாக இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். மேலும் மிகவும் பழமையான பொருட்களை வீட்டில் வைத்து கொண்டு இருந்தால் அதை மாற்றி விடுங்கள் என்றும் அறிவுரை கூறியிருக்கிறார்கள். தந்தை மகன் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.