உஷார் பெற்றோர்களே… பள்ளிக்கு அனுப்பிய குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… 3 வயது சிறுவனைத் தாக்கிய ப்ளே ஸ்கூல் ஆசிரியை… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

By Swetha on ஐப்பசி 20, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு ப்ளே பள்ளியில், மூன்று வயது சிறுவனை ஆசிரியை ஒருவர் கன்னத்தில் அறைந்து, தலை முடியை நகத்தால் கிள்ளியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வீடியோ காலில் குழந்தை அழுதுகொண்டிருப்பதைக் கண்ட பெற்றோர், சந்தேகத்தின் பேரில் நேரில் சென்று பார்த்தபோது இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

சம்பவத்தன்று ஆசிரியர் குழந்தையை சரியாக உணவு உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதாகவும், சிறுவன் அழுது நடுங்கியதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பள்ளியின் சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்தபோது ஆசிரியை குழந்தையைத் தாக்கியது பதிவாகியிருந்ததாகவும், இதனால் அச்சமடைந்த குழந்தை தற்போது பள்ளி என்றாலே பயந்து நடுங்குவதாகவும் தாயார் கண்ணீருடன் தெரிவித்தார்.

   

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை காவல்துறையில் எழுத்துபூர்வமாகப் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.