பொதுவாக ஒரு வீட்டில் செழிப்பு மற்றும் நிம்மதி வீட்டில் கட்டமைப்பு மாத்திரம் அல்லாமல் வீட்டில் வளர்க்கப்படும் செடிகளின் தாக்கமும் சொல்லப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டது போல வீட்டில் வளர்க்கப்படும் சில செடிகள் அசுபமான பலன்களை கொண்டு வந்து சேர்க்கிறது .இது போன்ற தாவரங்களாக வீட்டில் முன் வைப்பதால் எதிர்மறையான ஆற்றல் ஈர்க்கப்படுகிறது. அந்த வகையில் வீட்டின் நிம்மதிக்கும், செழிப்பிற்கும் ஆபத்து விளைவிக்கும் செடிகள் என்ன என்பதை பார்க்கலாம். வீட்டிற்கு முன்பாக அதிகமான வாசனை கொண்ட பூக்கள் அல்லது இரவில் மலரும் பூக்கள் கொண்ட செடிகளை மறந்தும் வைக்க கூடாது.
இதனை பின்புறமாக வைத்துக் கொள்ளலாம். ஆலமரம், அரசமரம் போன்ற மரங்களை வீட்டிற்கு அருகில் வளர்க்கக்கூடாது. இதுபோன்ற மரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடாது. அதோடு எதிர்மறையான ஆற்றல்களை தன்வசம் இழுக்கும். இரவில் வித்தியாசமான சத்தம் எழுப்பும் உயிரினங்கள் இது போன்ற மரங்களில் வாழும். அதனால் உங்களின் தூக்கம் கெடுவதற்கு வாய்ப்பு அதிகம். துளசி செடி வைக்க கூடாது என்று பலரும் பதறிப் போவார்கள். ஆமாம் வாடி போய் இருக்கும் துளசி செடிகளை வீட்டிற்கு முன் வைக்க கூடாது. இது வீட்டில் செழிப்பில் ஏதாவது பிரச்சினை உள்ளதை காட்டிக் கொடுக்கும்.
