காலையிலேயே பயங்கர அதிர்ச்சி… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல்… பெரும் பதற்றம்..!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக தினமும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வந்த மின்னஞ்சலில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிர்ரதல்ல  விடுக்கப்பட்டுள்ளதாக வாசகங்கள் இடம் பெற்று இருந்தது. அதில்  தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர் மகன் இன்பநிதி ஆகிய இருவரையும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக கொலையாளிகளை அமர்த்தியுள்ளோம். இதை தவிர்க்க வேண்டும் என்றால் 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.

இதை பார்த்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்ததையடுத்து உதயநிதி ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். இந்த கடிதத்தை தீவிரவாத  தடுப்புபிரிவு போலீசாரிடம் ஒப்படைத்து அதன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல சினிமா பிரபலங்கள் ஆகியோரின் வீடுகளுக்கும் மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.