மரத்தில் மோதி தீப்பிடித்த விமானம்…! 2 மகள்களுடன் உள்ளே சிக்கிய பெற்றோர்… துணிச்சலாக மீட்ட மக்கள்…. இணையத்தில் குவியும் பாராட்டு மழை…!!

By Devi Ramu on ஐப்பசி 20, 2026

Spread the love

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி மரத்தில் மோதி தீப்பிடித்தது. விமானம் குடியிருப்புப் பகுதி அருகே விபத்துக்குள்ளானதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகத் தீயை அணைக்கவும், உள்ளே சிக்கியவர்களை மீட்கவும் துணிச்சலுடன் களமிறங்கினர்.

கோடரி, சுத்தியல் மற்றும் தீயணைப்பு உபகரணங்களுடன் விரைந்த நான்கு அண்டை வீட்டார், கொழுந்துவிட்டு எரிந்த விமானத்தின் காக்பிட் கண்ணாடிகளையும் உலோகப் பகுதிகளையும் அடித்து உடைத்துத் தந்தையையும் இரண்டு மகள்களையும் முதலில் பாதுகாப்பாக மீட்டனர். அதனைத் தொடர்ந்து, விமானத்திற்குள் சிக்கிக்கொண்ட தாயையும் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்டனர். உரிய நேரத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு நால்வரின் உயிரைக் காப்பாற்றிய இந்த நான்கு சாதாரண மனிதர்களின் செயல் தற்போது உலகளவில் பாராட்டுக்களைப் பெற்று வைரலாகி வருகிறது.