“இரவில் மது விருந்து…” மனைவியை கொன்று இரவோடு இரவாக உடலை எரிக்க முயன்ற கணவர்…. குடும்ப தகராறில் பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 20, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக அடக்கம் செய்ய முயன்ற கணவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நசியனூர் காரைவாய்க்கால் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – ராஜேஸ்வரி (38) தம்பதியினர். இருவரும் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் 18 அன்று இரவு இருவரும் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நாகராஜ் தனது மனைவியைத் தாக்கியுள்ளார்.

இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி வீட்டின் அருகே இருந்த ஆட்டுக் கொட்டகையில் பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பை மறைக்க முயன்ற கணவர் நாகராஜ் மற்றும் குடும்பத்தினர் உடலை ரகசியமாக எரிக்க முயன்ற தகவல் கசிந்ததை அடுத்து, சித்தோடு போலீசார் விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காகப் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகராஜைக் கைது செய்துள்ள போலீசார், இக்கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.