பிளான் ரெடி… ஹனிமூன் போக போறோம்… குஷியில் மகாலட்சுமி ரவிந்தர் ஜோடி….

By Begam

Published on:

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டது  நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இவர்கள் தற்சமயம் அளித்த பேட்டி ஒன்றில் ஹனிமூன் எங்கே செல்கிறார்கள் என்பதை பற்றி கூறியுள்ளார்கள். அப்பேட்டி தற்பொழுது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

   

திருமணமான நாள் முதலே தமிழ்நாட்டின் ஹாட் டாபிக் இவர்களது திருமணம்தான். தயாரிப்பாளர் ரவீந்தர் நட்புனா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை  திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சின்னத்திரை சீரியலில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஜாக்கியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். முதன் முதலாக ‘அரசி’ சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அணில் என்பவரை காதலித்து முதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.

ஆனால் இருவரும் மனவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். கடந்த ஆண்டு இவரது முதல் கணவர் திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் இவர் தற்பொழுது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.  ரவீந்திரன் தனது முகநூல் பக்கத்தில் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களது திருமணத்தை வெளிப்படுத்தினார்.

திருமணம் முடிந்தால் தேன்நிலவு செல்வது வழக்கம் தான். அதுபோல இவர்கள் தேன் நிலவுக்கு செல்ல தயாராக இருக்கின்றனர். தேன் நிலவு லண்டனிலா  ஐரோப்பாவிலா என்று யோசித்துக் கொண்டிருக்கும் இவர்கள் இப்போது செல்லப் போவதில்லையாம். தலை தீபாவளியை கொண்டாடிவிட்டு நவம்பர் மாதத்தில் செல்ல இருப்பதாக பேட்டி  ஒன்றில் கூறியுள்ளனர்.