அப்படியே தந்தையைப் போல மகன்… நடிகர் சிவகார்த்திகேயன் மகன் புகைப்படம் …லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

By Begam on புரட்டாதி 10, 2022

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி’ போட்டியாளராக கலந்து கொண்டார். மிமிக்ரி செய்யும் கலைஞராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர், சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

   

தனது சொந்த மாமா மகளாகிய ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளனர். மகள் ஆராதனாவுடன் மட்டும் புகைப்படத்தை வெளியிட்டு வந்த சிவகார்த்திகேயன் முதன் முதலாக மகன் குகன் உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தந்தையைப் போலவே மகன் இருக்கிறாரே என்று கருத்துக்களை கூறி வருகின்றனர் .