சமீபத்தில் தாய்லாந்தின் புக்கெட்டிலிருந்து புதுடெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் எதிர்பாராத விதமாக 300 அடி கீழே சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கரமான குலுக்கலின் காரணமாக, விமானத்தில் இருந்த 137 பயணிகளில் 20 பேருக்கும், 4 விமானப் பணியாளர்களுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதில் இரண்டு பணியாளர்களுக்கு எலும்பு முறிவுகளும், கழுத்து மற்றும் தண்டுவடப் பகுதிகளில் கடுமையான பாதிப்புகளும் உண்டாகியுள்ளன.
இந்த அசம்பாவிதம் நடந்தபோது முதன்மை விமானி தனது இருக்கையில் இல்லை எனவும், இணை விமானியே விமானத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தானியங்கி முறை துண்டிக்கப்பட்டு விமானத்தின் முன்பகுதி மேல்நோக்கி உயர்ந்தது. இதைச் சரிசெய்ய இணை விமானி விமானத்தைக் கீழ்நோக்கிச் செலுத்தியபோதுதான், அது திடீரென 300 அடி சரிந்து ‘நெகட்டிவ்-ஜி’ நிலையை அடைந்தது. இதனால் புவியீர்ப்பு விசை தற்காலிகமாகத் தலைகீழாகி, சீட் பெல்ட் அணியாத பயணிகளும், நின்றுகொண்டிருந்த முதன்மை விமானியும் காற்றில் மிதந்து மேற்கூரையில் மோதி காயமடைந்தனர்.
கடும் போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் தனது இருக்கைக்குத் திரும்பிய முதன்மை விமானி, இணை விமானியுடன் இணைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். வழியில் கொல்கத்தாவில் தரையிறக்க ஆலோசிக்கப்பட்டாலும், இறுதியில் விமானம் டெல்லியிலேயே பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில், முதன்மை விமானி கஞ்சா பயன்படுத்தியிருந்தது இரண்டு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…