சபைக்கே வராத திமுக.. திடீரென சட்டமன்றத்தில் உதயநிதி போட்ட “மெகா ஸ்கெட்ச்”… CM விஜய்க்கு உதயநிதி தந்த “திடீர் சர்ப்ரைஸ்”….!

Spread the love

மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவதால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தொகுதி மறுவரையறைக்கு எதிரான மாநில அரசின் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். முன்னதாக, இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை. எனினும், தற்போது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முக்கிய தீர்மானத்திற்கு அதிமுக மற்றும் பாஜக எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான திமுக தனது முழு ஆதரவை அளித்துள்ளது.

இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திய தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை எந்தக் காரணம் கொண்டும் குறையக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டால், அது வட மாநிலங்களுக்குச் சாதகமாகவும், தென் மாநிலங்களுக்குப் பெருத்த பின்னடைவாகவும் அமையும் என எச்சரித்த அவர், தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாச்சாரமான 7.18 சதவீதம் எக்காரணத்தைக் கொண்டும் குறையக்கூடாது என வலியுறுத்தினார்.

தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க திமுக ஏற்கனவே பல தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தென் மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியது, கூட்டுக் நடவடிக்கைக் குழு அமைத்து 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைக்கக் கோரியது மற்றும் நாடாளுமன்றத்தில் மசோதா நகலை எரித்து போராட்டம் நடத்தியது போன்ற வரலாற்றுச் நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். ஒன்றிய அரசு மீண்டும் இச்சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் பட்சத்தில், சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின்படி 1971 முதல் 2026 வரை உள்ள நிலையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மகளிர் 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை திமுக முழுமையாக வரவேற்பதாகத் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், அம்மசோதாவுக்காகத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டாலும் கூட, அது 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகையின் அடிப்படையிலேயே செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார். தமிழ்நாடு எம்பிக்களின் எண்ணிக்கை குறையக் கூடாது என்பதில் திமுகவின் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் கொண்டு வந்த இந்த எதிர்ப்புத் தீர்மானத்தை திமுக சார்பில் வரவேற்பதாக உறுதியளித்தார்.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago