வளைகுடா பிராந்தியத்தில் கடந்த பல மாதங்களாக நீடித்து வரும் போர்ப் பதற்றம், தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையேயான நேரடிப் மோதல்கள் சற்றே குறைந்திருந்தாலும், பிராந்திய அமைதி இன்னும் திரும்பவில்லை. செங்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடல்வழிப் பாதைகளில் தொடர்ச்சியாக நடைபெறும் தாக்குதல்கள், இந்த விவகாரம் ஒரு மிகப்பெரிய பிராந்திய போராக உருவெடுக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
ஏமனின் பாப் அல்-மண்டேப் ஜலசந்தி பகுதியில் பயணித்த ‘திஹாமா’ என்ற எகிப்து நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பணியாளர்கள் உயிரிழந்தனர். மேலும், மீட்புப் பணிகளின் போது நடந்த அடுத்தகட்டத் தாக்குதலில் ஹவுதி மீட்புக் குழுவைச் சேர்ந்த இருவரும் பலியாகினர். இச்சம்பவத்தில் 10 பேர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், சவுதி ராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்றதாலேயே இத்தாக்குதலை நடத்தியதாக ஹவுதி படை ஒப்புக்கொண்டுள்ளது.
மற்றொரு சம்பவமாக, ஓமன் வளைகுடாவில் பனாமா நாட்டின் கொடி ஏந்திய கண்டெய்னர் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை மீறிச் சென்றதாகவும், எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததாகவும் கூறி அமெரிக்கா ஏவிய ஏவுகணை தாக்குதலில் அப்போர்க்கப்பலின் எஞ்சின் செயலிழந்தது. பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து 131 கி.மீ தொலைவில் தாக்கப்பட்ட இக்கப்பல், சமீபத்தில் மும்பை துறைமுகத்திற்கு வந்து சென்றதுடன், மீண்டும் இந்தியாவை நோக்கிப் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகைய தொடர் தாக்குதல்களால் செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டேப் வழியிலான சர்வதேசக் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாளொன்றுக்கு சராசரியாக 50 கப்பல்கள் பயணித்த நிலையில், தற்போது அது 32 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல, தினமும் 140 வரை கப்பல்கள் செல்லும் முக்கிய வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் வெறும் 6 கப்பல்கள் மட்டுமே பயணிக்கும் அளவுக்குச் சூழல் மோசமடைந்துள்ளது. இது உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…
மத்தியப் பிரதேச மாநிலம் பத்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அக்ஷித், வெறும் 200 ரூபாய் மதிப்புள்ள அதிர்ஷ்டக்…
சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…