கழிப்பறையை விட தலையணையில் ஒளிந்திருக்கும் பேராபத்து.. நீங்க இந்த தவறை பண்றீங்களா?.. அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு..!

By Nanthini on ஆடி 7, 2025

Spread the love

நாம் உடுத்தும் துணிகளை மறக்காமல் துவைக்க தெரியும் நமக்கு தினமும் உபயோகிக்கும் தலையணை உறைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகளை துவைக்க மறந்து விடுகிறோம். அதனால் ஏற்படும் பின் விளைவுகளை யாருமே உணர்வதில்லை. தலையணை உறைகள், போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை துவைக்காமல் இரண்டு வாரங்களுக்கு மேல் பயன்படுத்தினால் முகப்பரு, தோல் அரிப்பு, சுவாச ஒவ்வாமை, ஈரமான படுக்கையில் உருவாகும் பாக்டீரியா, பூஞ்சை பெருக்கத்தால் பூஞ்சை தொற்றுகள் வரும். முக்கியமாக அழுக்கான படுக்கை பொருள்கள் தூக்கத்தின் தரத்தையும் சீர்குலைக்கும். சோர்வு, எரிச்சல், காலப்போக்கில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கும் இது வழிவகுகின்றது.

இந்தியாவின் வெப்பமான அல்லது ஈரப்பதமான காலநிலையில் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் போர்வைகள் போன்ற பொருட்களை ஏழு முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை துவைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பல விதமான நோய்களிலிருந்து தப்பிக்கலாம். ஒரு வாரமாக சுமைக்காத தலையணை urai கழிப்பறை இருக்கையை விட பல மடங்கு ஆபத்தானது. கழிப்பறை இருக்கையை விட அதில் 17 ஆயிரம் மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். National sleep foundation ஆய்வு முடிவில் இந்த அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.