சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விஷயங்கள் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மூன்று இளைஞர்கள் ஒரு ஓடையில் அமைதியாக குளிக்கிறார்கள். அதில் ஒருவர் பசுமை மற்றும் அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட கரைக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். திடீரென எங்கிருந்தோ கரையில் அமர்ந்திருந்த அவரின் பின்னால் ஒரு பெரிய பாம்பு ஒன்று வருகிறது.
Never get too comfortable in any place 😮 pic.twitter.com/3gqm5tLq7b
— Learn Something (@cooltechtipz) July 5, 2025
அது அவரை தாக்குகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் ஆகவில்லை. அவர் உடனே தண்ணீரில் குதிக்கிறார் .இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதை பார்த்து இணையவாசிகள் “எந்த இடத்திலும் அலட்சியமாக இருக்கக் கூடாது” என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
