குஷியோ குஷி…. “ஒரே கார்டு… எங்கு வேண்டுமானாலும் பொருட்கள்”…. ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு வழங்கிய செம ட்ரீட்…. சூப்பர் அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 11, 2026

Spread the love

மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ (One Nation One Ration Card) திட்டம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. முன்பு வேலைவாய்ப்பு அல்லது கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயரும் மக்கள், தங்களது ரேஷன் கார்டை புதிய முகவரிக்கு மாற்றுவது கட்டாயமாக இருந்தது; இதனால் பல்வேறு அலைச்சல்களையும் சந்தித்து வந்தனர்.

ஆனால், தற்போது இத்திட்டத்தின் மூலம் நாட்டில் எங்கு சென்றாலும், தங்களது பழைய ரேஷன் கார்டைக் வைத்தே அங்கிருக்கும் நியாயவிலைக் கடைகளில் தங்களுக்குரிய உணவுப் பொருட்களை தடையின்றி பெற்றுக் கொள்ள முடியும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் புதிய முகவரி மாற்றத்திற்காக அலைவது முற்றிலும் தவிர்க்கப்பட்டு, நாட்டின் எந்த மூலையிலும் தங்களின் உணவுப் பாதுகாப்பை எளிதில் உறுதி செய்துகொள்ள முடியும்.