12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்…! கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலை… விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!!

By Devi Ramu on ஐப்பசி 11, 2026

Spread the love

தமிழ்நாடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்புச் சங்கம், , மாநில தத்தெடுப்பு வள முகமை மற்றும் குழந்தைகள் உதவி எண் கட்டுப்பாட்டு அறையில் காலியாக உள்ள 9 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திட்ட அலுவலர், கணக்கு அலுவலர், கணக்காளர், உதவியாளர், தரவு உள்ளீட்டு ஆபரேட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இப்பணிகளுக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.13,240 முதல் ரூ.34,755 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் dsdcpimms.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை உரிய சான்றிதழ்களுடன் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் எழும்பூர் அலுவலகத்திற்கு அஞ்சல் மூலமாகவோ, நேரில் அல்லது scpsrecruitment2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.