சொந்த ஊரில் மகனுக்கு காது குத்தி மொட்டையடித்த சிவகார்த்திகேயன்… வைரலாகும் புகைப்படங்கள்..!

By Soundarya on மாசி 5, 2025

Spread the love

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று பிரபல காமெடியனாக வெற்றி பெற்ற தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு தொலைக்காட்சி மூலமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் காரணமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

   

மெரினா படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் 50 கோடி வசூல் செய்த படமா மான் கராத்தே படம் அமைந்தது. அதன் அடுத்து இவருடைய ரெமோ படம் 25 கோடி வசூல் செய்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார்.

   

 

இவருடைய நடிப்பில் கடந்த வருடம் அமருடன் படம் வெளியாகி பெரிய ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது கைவசம் பல முக்கிய படங்களை வைத்துள்ளார் . சுதா கொங்கரா  இயக்கத்தில் பராசக்தி மற்றும் ஆர். ஜே பாலாஜி இயக்கத்தில் ஆகியவற்றிலும் நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவது மகனான  பவனுக்கு நேற்று காதணி விழா நடைபெற்றுள்ளது.

திருவாரூரில் இருக்கும் அவருடைய சொந்த ஊரான திருவீழிமிழலையில் கோவிலில் இந்த காதணி விழா நடைபெற்றுள்ளது. இதனையடுத்து  சிவகார்த்திகேயன் உடன் அங்கிருந்தவர்களும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது