இயக்குனர் சிகரம் என போற்றபடுபவர் பாலசந்தர்…. அவருக்கே குருவாக இருந்த புட்டான்னா கனகல் அவர்களை பற்றி தெரியுமா…?

By admin on மாசி 5, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படுபவர் பாலச்சந்தர். பல நாயகன் நாயகிகளை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர். ரஜினிகாந்த், கமலஹாசன், நாசர், பிரகாஷ்ராஜ், விவேக் என இவர் அறிமுகம் செய்த அனைத்து நடிகர்களும் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர். தமிழ் இயக்குனர்களும் நடிகர்களும் நடிகைகளும் மிகப்பெரிய இடத்தில் மரியாதையோடு நடத்தக்கூடிய ஒரு இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள் தான்.

   

கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த பாலச்சந்தர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி பட்டம் முடித்தார். சினிமாவில் ஆர்வம் கொண்டு சினிமாவில் நுழைந்த பாலச்சந்தர் பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார். இவரது இயக்கத்தில் அதிகமாக பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர் தான்.

   

மேஜர் சந்திரகாந்த், பூவா தலையா, பாமா விஜயம், அச்சமில்லை அச்சமில்லை, வறுமையின் நிறம் சிவப்பு, புதுப்புது அர்த்தங்கள், நூற்றுக்கு நூறு, அக்னிசாட்சி, புன்னகை மன்னன், கல்யாண அகதிகள் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய பாலச்சந்திரன் தமிழ் மட்டுமல்லாது இந்தி தெலுங்கு ஆகிய மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அனைவராலும் போற்றப்படும் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் பாலச்சந்தர் அவர்களுக்கு குருவாக ஒருத்தர் இருந்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர்தான் புட்டன்னா கனகல் ஆவார்.

 

புட்டன்னா கனகல் தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். இவர் பெரிதும் கன்னடத்தில் அதிக படங்களை இயக்கியிருக்கிறார். இவரது படங்களின் ஆர்ட் வொர்க் திரைக்கதை எல்லாம் அவ்வளவு அருமையாக இருக்கும். இவரிடம் தான் நுட்பங்களை பாலச்சந்தர் கற்றுக் கொண்டிருக்கிறார். என்னதான் புட்டன்னா கனகல் பாலச்சந்தரை விட வயதில் இளையவராக இருந்தாலும் அவர்தான் தன்னுடைய குரு என்று பல இடத்தில் கூறியிருக்கிறாராம் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர்.