போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

By Swetha on ஆனி 18, 2026

Spread the love

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத வாலெட்டுகள் “செயலற்ற வாலெட்” எனக் கருதப்பட்டு, அதன்பின் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் இந்த ரூ100 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு போன்பே பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த கூடுதல் கட்டண விதிப்பு என்பது போன்பே வாலெட் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், அதைப் பயன்படுத்தாதவர்களுக்கும் மட்டுமே பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சாதாரண முறையில் யுபிஐ மூலம் நேரடியாக வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிவர்த்தனைகளைச் செய்யும் பொதுவான பயனர்களுக்கு இந்த ரூ100 அபராதக் கட்டணம் பொருந்தாது என்றும் அந்தச் செய்தியில் விளக்கப்பட்டுள்ளது.