“கேமிங் வெறியால் வந்த வினை…” போன் வெடித்து காயமடைந்த மர்ம உறுப்பு…. அதிக வெப்பத்தால் வெடித்து சிதறி பயங்கரம்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 23, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மஜித் என்ற வாலிபர், நாள் முழுவதும் தனது மொபைல் போனில் பப்ஜி கேம் விளையாடும் வழக்கம் கொண்டவர். தொடர்ச்சியாக கேம் விளையாடியதால் மொபைல் போன் அளவுக்கு அதிகமாகச் சூடாகி, கையில் பிடிக்க முடியாத நிலைக்கு மாறியுள்ளது.

இருப்பினும், அதை பொருட்படுத்தாத மஜித், சூடான அந்த மொபைல் போனை உடனடியாகத் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் வைத்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே பாக்கெட்டில் இருந்து புகை வரத் தொடங்கி, திடீரெனப் போன் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அவரது கை மற்றும் ரகசிய உறுப்புப் பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

   

அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துச் சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த மொபைல் போன் வாங்கிய சில நாட்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளது. அளவுக்கு அதிகமாக கேம் விளையாடி போன் சூடானால், அதை உடனடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.