BREAKING: பெட்ரோல், டீசல் விலை… மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு..!!

By Soundarya on சித்திரை 28, 2026

Spread the love

மேற்காசியப் போர் காரணமாகக் கச்சா எண்ணெய், LPG மற்றும் PNG இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்படாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த பெட்ரோலிய அமைச்சகக் கூடுதல் செயலாளர் சுஜாதா சர்மா, நம் நாட்டில் போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால், பொதுமக்கள் விலையேற்றம் குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படலாம் என்று முன்னதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சர்வதேசச் சூழலால் இறக்குமதியில் சவால்கள் இருந்தாலும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இருப்பு இருப்பதால் தட்டுப்பாடோ அல்லது விலை உயர்வோ இப்போதைக்கு இருக்காது என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.