பெரும் நிலச்சரிவு.. சாதுரியமாக செயல்பட்டு 67 பேரின் உயிரை காப்பாற்றிய நாய்.. நெகிழ வைக்கும் சம்பவம்..!

By Nanthini on ஆடி 9, 2025

Spread the love

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் இறுதியில் ஏற்பட்ட மேல வெடிப்பு காரணமாக கன மழை பெய்து வந்தது. கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த ஜூன் இருபதாம் தேதி முதல் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்படியான நிலையில் நாய் ஒன்று சாதுரியமாக செயல்பட்டதால் 67 பேர் நிலச்சரிவிலிருந்து உயிர் தப்பிய சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு ஒரு மணி அளவில் மண்டி மாவட்டத்தின் சியாநதி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்குள்ள வீடுகள் தரைமட்டமானது.

இது தொடர்பாக பகுதியை சேர்ந்த நரேந்திரா என்பவர் கூறுகையில், நள்ளிரவில் இரண்டாவது தளத்திலிருந்து என்னுடைய நாய் குறைக்க ஆரம்பித்தது. நான் அங்கு சென்று பார்த்ததும் சுவற்றில் விரிசல் ஏற்பட்டு அது வழியாக தண்ணீர் உள்ளே வந்து கொண்டிருந்தது. உடனே கீழே இருந்தவர்களை எழுப்பி வெளியேற சொன்னேன். மேல கிராமத்தில் உள்ள மற்றவர்களையும் எழுப்பி வெளியேறுமாறு அறிவுறுத்தேன். நாங்கள் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அந்த இடத்தில் பெரும் நிலசரிவு ஏற்பட்டது.

   

இதில் ஐந்து வீடுகளைத் தவிர மற்ற அனைத்து வீடுகளும் நிலச்சரிவில் தரைமட்டமாகியது. 20 குடும்பங்களை சேர்ந்து 67 பேர் உயிர் தப்பினோம் என்று அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வீடுகளை இழந்த அனைவரும் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். நள்ளிரவில் சாதுர்த்தியமாக செயல்பட்டு 67 பேரின் உயிரைக் காப்பாற்றிய நாயின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.