பர்சனல் லோன்க்கு ட்ரை பண்ணிட்டு இருக்கீங்களா….? குறைந்த வட்டியில் லோன் வழங்கும் டாப் வங்கிகள்…. கட்டாயமாக தெரிஞ்சுக்கோங்க….!!

By Srimathi on புரட்டாதி 7, 2025

Spread the love

பண்டிகை காலம் வரவேற்கும் இந்த சமயத்தில், பர்சனல் லோனுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. பல முன்னணி வங்கிகள் சலுகை முறையில் கடன் வழங்குவதோடு, நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட கடன் பெறுநர்களுக்கான ப்ராசசிங் கட்டணங்களை தள்ளுபடி செய்வதற்கு வாய்ப்பு உண்டு. இது உத்திரவாதம் இல்லாத கடன் என்பதால், விண்ணப்பதாரர்களின் நம்பகத் தன்மையை மிக கவனத்தோடு ஆய்வு செய்வார்கள். இதற்கு  கிரெடிட் ஸ்கோர், வருமானம், வேலை மற்றும் வேலை செய்ய நிறுவனத்தின் சுயவிவரம் போன்ற விஷயங்களை கருத்தில் எடுத்துக் கொள்வார்கள். இதில் ரிஸ்க் அதிகமாக இருப்பதால், வட்டியும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதன் வட்டி விகிதம் 9.99 முதல் 13.75 % வரை வசூலிக்கப்படுகிறது. இந்த கடனை திரும்பி செலுத்துவதற்கு, 5 வருடங்கள் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. பல முன்னணி வங்கிகளின் பர்சனல் லோன் விகிதத்தை காணலாம்.

    • ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (10.10%) – இதில் நீங்கள் ரூ. 5 லட்சம் கடன் வாங்கினால் மாதம் ரூ. 10,648 வீதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.
    • பஞ்சாப் நேஷனல் (10.5%) – இதில் நீங்கள் ரூ. 5 லட்சம் கடன் வாங்கினால் மாதம் ரூ. 10,747  வீதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.
    • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ( 10.75 %) – இதில் நீங்கள் ரூ. 5 லட்சம் கடன் வாங்கினால் மாதம் ரூ. 10,809 வீதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.
    • பேங்க் ஆஃப் பரோடா ( 10.90%) – இதில் நீங்கள் ரூ. 5 லட்சம் கடன் வாங்கினால் மாதம் ரூ. 10,846 வீதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.
    • கனரா பேங்க் ( 13.75%) – இதில் நீங்கள் ரூ. 5 லட்சம் கடன் வாங்கினால் மாதம் ரூ. 11,569 வீதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.
    • ஆக்சிஸ் பேங்க் ( 9.99%) – இதில் நீங்கள் ரூ. 5 லட்சம் கடன் வாங்கினால் மாதம் ரூ.  10,621  வீதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.
    •  ICICI பேங்க் ( 10.6%) – இதில் நீங்கள் ரூ. 5 லட்சம் கடன் வாங்கினால் மாதம் ரூ. 10,772  வீதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.
    • HDFC  பேங்க் (10.9 %) – இதில் நீங்கள் ரூ. 5 லட்சம் கடன் வாங்கினால் மாதம் ரூ. 10,846   வீதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.
    • கோடாக் மஹேந்திரா பேங்க் ( 10.99%) – இதில் நீங்கள் ரூ. 5 லட்சம் கடன் வாங்கினால் மாதம் ரூ. 10,869 வீதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.
    • Yes பேங்க் (11.25 %) – இதில் நீங்கள் ரூ. 5 லட்சம் கடன் வாங்கினால் மாதம் ரூ. 10,934 வீதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.