கள்ள காதலியை கொன்று விட்டு…. தற்கொலை செய்து கொண்ட இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

By Srimathi on புரட்டாதி 7, 2025

Spread the love

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜோதி குமாரி(24) என்பவருக்கு திருமணமாகி கணவர் உள்ள நிலையில், இவருக்கு சுமித் குமாருடன்(26) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரையும் ஜோடியின் கணவர் கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்து உள்ளனர்.

இதற்கிடையில் சுமித் குமாருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் நடைபெற்ற முடிந்தது. இதனால் சுமித்திற்கும், ஜோதிகும்  இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் பன்பூர்வா கிராமத்தில் உள்ள ஆள் நடமாற்றம் இல்லாத பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு மீண்டும் வாக்குவாதம் முற்றியது. இதனால் சுமித், தான் மறைத்துக் கொண்டு வந்த கத்தியால் ஜோதியை குத்தி கொலை செய்துவிட்டார். பின் தான் கொண்டு வந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு சுமித்தும் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.