திட்டமிட்ட வேலையா…? “விதான் சௌதாவை வெடிவைத்து தகர்ப்பது போல் ஏஐ வீடியோ…” பீகார் தொழிலாளி அதிரடி கைது… ஆக்ஷனில் இறங்கிய போலீசார்…!!

By Devi Ramu on ஐப்பசி 22, 2026

Spread the love

பெங்களூருவில் அமைந்துள்ள கர்நாடக மாநிலச் சட்டமன்றக் கட்டிடமான விதான் சௌதா மீது வெடிகுண்டு தாக்குதல் நடப்பது போலச் செயற்கை நுண்ணறிவு மூலம் போலி வீடியோவைத் தயாரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது தொழிலாளியைப் பெங்களூரு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

பிகாரைச் சேர்ந்த ஹஸரத் அலி என்ற இளைஞர், துப்பாக்கியால் சுடுவது போல் பாவனை செய்து விதான் சௌதாவை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இணையக் கண்காணிப்பின் போது இந்த வீடியோவைக் கண்டறிந்த பெங்களூரு காவல்துறையினர், உடனடியாக அவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்த திட்டமிட்டாரா அல்லது வேறு ஏதேனும் சதி பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.