மோடி காலில் விழுந்த விஜய்… ஆளுநருடன் நடந்த ரகசிய டீலிங்…. தவெகவை பலப்படுத்த மோடி கொடுத்த கிரீன் சிக்னல்… தமிழக அரசியலில் அடுத்த மெகா ட்விஸ்ட்…!

By Nanthini on ஐப்பசி 22, 2026

Spread the love

தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள முதல்வர் விஜய் மற்றும் ஆளுநர் அர்லேகர் இடையேயான சந்திப்பு குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்தபோது, அவருக்கும் விஜய்க்கும் இடையே நடைபெற்ற ரகசிய சந்திப்பில் ஆளுநர் நியமனம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாக உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் ஆளுநரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த விஜய், சட்ட மசோதாக்களுக்கு விரைவான ஒப்புதல் அளிப்பது குறித்தும் விவாதித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் பின்னணியில் மிக முக்கியமான அரசியல் கணக்கீடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் நிலுவையில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை விரைவில் நடத்தி முடிக்க ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் தவெக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்துள்ள உற்சாகத்தில், மீதமுள்ள தொகுதிகளையும் கைப்பற்றி சட்டமன்றத்தில் தனது பலத்தை மேலும் பலப்படுத்திக் கொள்ள அந்தத் கட்சி திட்டமிட்டுள்ளது.

   

இந்த விவகாரத்தில் ஆளுநர் தரப்பிலிருந்தும் சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. விஜய்யைச் சந்தித்த ஆளுநர் அர்லேகர், நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு முழுமையாக வழங்கப்படும் என்றும், டெல்லியிலிருந்து தமக்குரிய அறிவுறுத்தல்கள் வந்துள்ளதாகவும் கூறி நம்பிக்கை அளித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசியலில் ஆளுநர் மாளிகையுடன் இணக்கமான போக்கை ஏற்படுத்தி, அரசின் அடுத்தடுத்த நகார்களை வெற்றிகரமாக முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.