FLASH NEWS: சற்றுமுன் விஜய்க்கு அதிர்ச்சி… ரோடு ஷோவிற்கு அனுமதி மறுப்பு…!!

By Soundarya on கார்த்திகை 29, 2025

Spread the love

டிச.5-ம் தேதியன்று புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துவதற்கான பணியை தவெக தலைவர் விஜய் முடுக்கிவிட்டிருந்தார். இதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தற்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக ரோடு ஷோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் அண்டை மாவட்டங்களில் இருந்து அதிகளவில் மக்கள் அங்கு திரண்டால், கரூர் போன்ற அசம்பாவிதம் அங்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி போலீஸ் அனுமதி வழங்கவில்லையாம். அதேநேரம், எப்படியாவது அனுமதி பெற்றுவிட புஸ்ஸி ஆனந்த் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.