தவெகவை பார்த்து DMK பயப்படும் நிலை… ADMK 4 சீட் கூட வெல்லாது…. புட்டு புட்டு வைத்த நாஞ்சில் சம்பத்…!!

By Soundarya on கார்த்திகை 29, 2025

Spread the love
செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளார். இவருக்கு அங்கு முக்கிய பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செங்கோட்டையன் தனது உயிர் மூச்சு உள்ளவரை தவெக வுக்கு உழைப்பேன் என்றும், விஜயை வெற்றிபெற வைப்பேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுகவில் உள்ள ஏராளமான தலைவர்கள் தவெகவுக்கு செல்வார்கள் என்றும், 2026 தேர்தலில் அதிமுக 4 தொகுதிகளில் வெல்வதே கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்  ‘எடப்பாடி பழனிசாமி இனி மீண்டு வர முடியாத நிலையை உருவாக்கி இருக்கிறது. செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றது திமுகவுக்கும் சிக்கல்தான். தவெகவை பார்த்து திமுக பயப்பட வேண்டிய நிலை வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.