“தேவாலயமா? தேர்தல் அலுவலகமா? … எங்கள் ஓட்டைத் தீர்மானிக்க நீங்கள் யார்?”… திமுக ஆதரவு நோட்டீஸால் குமரியில் வெடித்த மக்கள் புரட்சி…!!!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மறைமாவட்டத்திற்கு உட்பட்ட தேவாலயங்களில், திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாகத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கத் திட்டமிட்டதைக் கண்டித்து, மார்த்தாண்டத்தில் உள்ள ஆயர் இல்லத்தை அந்தந்தப் பகுதி பங்கு மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘சமயச் சார்பின்மை அரசியல் காப்போம்’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட அந்த நோட்டீஸில், குறிப்பிட்ட ஒரு கூட்டணிக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கோரப்பட்டிருந்தது. இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என்றும், தேவாலயங்களைப் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதாகவும் கூறி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இத்தகைய சூழலில், ‘தமிழக ஆயர் பேரவை’ மற்றும் ‘கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம்’ ஆகிய அமைப்புகளின் பெயரில் வெளியான இந்த நோட்டீஸ்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. மத உணர்வுகளைத் தூண்டி ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸைச் சந்தித்துப் புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களை, அவர் சந்திக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள், ஆயர் இல்லத்தின் வாசலிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதிலும் உள்ள பல்வேறு தேவாலயங்களில் இந்த நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதில் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் கிறிஸ்தவர்களாக ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தால் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தேவாலயங்களில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றும், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றும் பங்கு மக்கள் இந்த போராட்டத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

Muthu Mani

Recent Posts

“நான் பேசினது தப்பு தான்” நீதிமன்ற உத்தரவை மீறிட்டேன்… பகிங்கரமாக மன்னிப்பு கேட்ட ரவிமோகன்..!!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…

38 seconds ago

பகீர்!.. அண்ணிக்கு வந்த விபரீத கோபம்!. நாத்தனாரை தடியால் அடித்து கொன்ற கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…

7 minutes ago

“சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து வெற்றி” கார்ல்சனின் கோட்டையைத் தகர்த்த பிரக்ஞானந்தா… வியந்து பாராட்டிய ஆனந்த் மகிந்திரா..!!

2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…

9 minutes ago

பயிற்சியில் பாஸ் ஆனால் மட்டுமே பதவி… நிர்வாகிகளுக்கு அண்ணாமலை போட்ட அதிரடி கண்டிஷன்.. இடைத்தேர்தலிலும் அதிரடி முடிவு..!!

திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…

14 minutes ago

“கல்யாணம் வேணும்னா இதை செய்!”.. காதலி பெற்றோர் போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. காதலன் விபரீத முடிவு.. பதறவைக்கும் பின்னணி..!!

திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…

15 minutes ago

“எல்லாத்துக்கும் திமுக தான் காரணமா..?” அப்புறம் ஏன் நீங்க ஆட்சியில் இருக்கீங்க..? எதிர்க்கட்சிகளை அதிரவைத்த மேயர் பிரியாவின் அதிரடி கேள்வி..!!

"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…

16 minutes ago