திடீர் திருப்பம்..! அதிமுகவுடன் கூட்டணி… முடிவை அறிவித்த முக்கிய கட்சி… செம ஹேப்பியில் எடப்பாடி…!!

By Soundarya on கார்த்திகை 2, 2025

Spread the love

சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். பிறகு அமித்சாவை சந்தித்து பேசிய செங்கோட்டையன் மௌனம் காத்து வந்தார். இதனிடையே சமீபத்தில் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார். இது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில் நேற்று கட்சியிலிருந்து மொத்தமாக செங்கோட்டையனை நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.

 இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில்   அதிமுக கூட்டணியில், 2026 பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் (AMAK) தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிவித்துள்ளார், 234 தொகுதிகளிலும் குறைந்தபட்சம் தலா 10,000 பேருடன் AMAK அபார வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், வரும் தேர்தலில் நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதி (அ) சென்னை மதுரவாயலில் தான் போட்டியிட விரும்புவதாகவும் ராஜேஷ் பிரியா கூறியுள்ளார்.